மரண அறிவித்தல்கள்

திரு. இராஜன் முருகவேல்
திரு. இராஜன் முருகவேல்

பிரபல தமிழ் எழுத்தாளரும், சோழியான் என்ற புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராஜன் முருகவேல் அவர்கள் 15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Joseph
அந்தோனிப்பிள்ளை ஜோசப்

(ஓய்வு பெற்ற தபால் பரிசோதகர் – யாழ் பிரதம தபாலகம்)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் அவர்கள் காலமானார்.

சீவரட்ணம் புஸ்பேந்திரா
சீவரட்ணம் புஸ்பேந்திரா

யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும் நோர்வே (Sandvika ) வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் புஸ்பேந்திரா அவர்கள் 22.10.2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சீவரட்ணம் புஸ்பராணி தம்பதியினரின் அன்புப்புதல்வனும், காலம் சென்ற அன்புவைத்தியர் தனபாலரட்ணம் பரமேஸ்வரி தம்பதியினரின் பெறாமகனும்,  காலம் சென்ற மயில்வாகனம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும், திலகராணியின் அன்புக்கணவரும், கீர்த்தனின் பாசமிகு தந்தையும் ஆவார்.